
- அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு
- சிவகங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு
- ஜனாதிபதி
- வடிவேலு
- தின மலர்
சிவகங்கை, செப்.25: சிவகங்கையில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சங்கர நாராயணன் கொடியேற்றினார். கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு அரசு ஒய்வு பெற்றோர் மின் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஒய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர்.
மாவட்ட பொருளாளர் பவுன்தாய் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். மாவட்ட துணைத் தலைவர் மெய்யப்பன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
The post அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு appeared first on Dinakaran.