×

6,100 சதுர அடியில் 2,100 மரக்கன்றுகள் நடவு: பொதுமக்கள் பாராட்டு

 

சிவகாசி, செப்.25: சிவகாசி பெரியகுளம் கண்மாயை சோலையாக மாற்றும் வகையில் 6,100 சதுர அடி பரப்பளவில் 2,100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பெரியகுளம் கண்மாயில் கடந்த 2020ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பசுமை மன்றம் சார்பில் மியாவாக்கி காடு அமைக்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பாராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த மியாவாக்கி காடு நன்கு வளர்ந்து பறவைகளுக்கு இருப்பிடமாக மாறி உள்ளது. இந்நிலையில் இதே பெரியகுளம் கண்மாய் கிழக்கு பகுதியில் மரக்கன்று அமைக்கும் பணிகளை கடந்த 22ம் தேதி மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த கண்மாய் கரையில் சுமார் 6 ஆயிரத்து 100 சதுர அடி பரப்பளவில் 2 ஆயிரத்து 100 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ளது.

இதில் வேங்கை, தூங்குமூஞ்சி, தேக்கு, மாஞ்சியம், சந்தனம், பூ மருது, மஞ்சள் கடம்பு, வேம்பு, நீர்மருது, கருங்காலி, சிசு, மகோகனி, மருதம், வில்வம், வன்னி, புங்கன், ஆலம், அரசம், அயல் வாகை, நாட்டு வாகை, கற்பூர தைலம், சுவர்க்கம், புரசு, ஆடுதொடா, அசோகா, கடுக்காய், இலுப்பை, பலா, நெல்லி, சீதா, புளி, விளா, நாவல், மருதாணி, ஏழிலைப்பாலை, இலவம் பஞ்சு, இலந்தை, பூவரசு, கலாக்காய், கொடிக்காய், செண்பகம், பவளவல்லி, நொச்சி, நந்தியாவட்டை, நாகலிங்கம், பாதாம், கடம்பு, மந்தாரை, அரளி, மகிழம்பூ, கல்லிச்சி, அகத்தி, பாரிஜாதம், பன்னீர், சம்பங்கி, சரக்கொன்றை, அத்தி, மல்லிகை, மூங்கில் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன.  மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் கரையோரம் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மரக்கன்று வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது.

The post 6,100 சதுர அடியில் 2,100 மரக்கன்றுகள் நடவு: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Periyakulam ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை