×

ஜி 20 மாநாட்டின் தலைமை பதவி மிகவும் சவாலானதாக இருந்தது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

நியூயார்க்: ஜி 20 மாநாட்டின் தலைமை பதவி மிகவும் சவாலானதாக இருந்தது என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுபயணம் செய்து வருகிறார்.

உலகளாவிய தெற்கின் எழுச்சி: ஒத்துழைப்பு, நிறுவனங்கள், கருத்தாக்கங்கள்’ என்ற தலைப்பில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ செல்வாக்கு மிக்க நாடுகள் மாற்றத்தை எதிர்க்கின்றன. அவற்றை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நாம் பார்க்கிறோம். அமைப்பு ரீதியாக செல்வாக்கு மிக்க நாடுகள் அல்லது வரலாற்று ரீதியாக செல்வாக்கு மிக்க நாடுகள் உண்மையில் அந்தத் திறன்களையும் ஆயுதமாக்கியுள்ளனர். இன்றும் கூட இரட்டை நிலைபாடு கொண்ட உலகமாக தான் இருக்கிறது. கொரோனா தொற்றே இதற்கான உதாரணம்’’ என்றார்.

வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் உரையாற்றும் போது,‘‘ ஜி 20 மாநாட்டின் தலைமை பதவி மிகவும் சவாலானதாக இருந்தது.மாநாடும் சவாலாக இருந்தது.ஏனென்றால் வடக்கு- கிழக்கு என இரண்டு தரப்பில் ஆழமான பிளவு ஏற்பட்டிருந்தது.ஆனால், உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post ஜி 20 மாநாட்டின் தலைமை பதவி மிகவும் சவாலானதாக இருந்தது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : G20 ,External Affairs Minister ,Jaishankar ,New York ,Union External Affairs Minister ,G20 summit ,Dinakaran ,
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...