×

ஜாபர்கான்பேட்டை பகுதியில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்கள் கைது

சென்னை: மாநகராட்சி பூங்கா அருகே போதை ஊசி தயாரித்து ரூ.150க்கு விற்பனை செய்து வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே, இரவு நேரங்களில் அதிகளவில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குமரன் நகர் இன்ஸ்பெக்டர் பென்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், அந்த பூங்கா அருகே சாதாரண உடையில் கண்காணித்த போது, 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மாத்திரைகளை பவுராக மாற்றி, அதை தண்ணீரில் கலந்து, ஊசியில் ஏற்றிக்கொண்டிருந்ததை கவனித்தனர். உடனே, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், ஜாபர்கான்பேட்டை ஜோதிராமலிங்கம் நகரை சேர்ந்த சரண் (19), மேற்கு சைதாப்பேட்டை புது காலனி மெயின் தெருவை சேர்ந்த அருள் (32) என தெரியவந்தது. இவர்கள், மாதத்திற்கு 2 முறை ரயில் மூலம் ஐதராபாத் சென்று போதை மாத்திரைகள், ஊசிகளை மொத்தமாக வாங்கி வந்து, அந்த மாத்திரைகளை பொடியாக்கி, தண்ணீரில் கரைத்து, ஊசியில் ஏற்றி, ரூ.150க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. ஒரு ஊசியில் உள்ள போதை மருந்தை, உடலில் ஏற்றினால் 18 மணி நேரம் வரை போதை இருக்கும்.

இதனால் வாலிபர்கள் பலர் இந்த போதை ஊசியை அதிகளவில் வாங்கியதால், இதையை இருவரும் தொழிலாகவே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அருள் மற்றும் சரண் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட 1000 போதை மாத்திரைகள், 12 ஊசிகள், 300 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 2 பேர் அளித்த தகவலின்படி போதை மாத்திரை விற்பனையும் செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

The post ஜாபர்கான்பேட்டை பகுதியில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Jabarkhanpet ,Chennai ,Corporation Park ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...