×

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பாஜ எம்பி மீது கடும் நடவடிக்கை: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் பி.எம்.காம்ப்ளே வெளியிட்ட அறிக்கை: ஆளும் கட்சி எம்.பி.யின் இந்த வெறுப்பு வார்த்தைப் பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலியை பயங்கரவாதி என்று கூறியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாஜ எம்.பி. கேவலமாக பேசியுள்ளார். இந்திய முஸ்லிம்களின் கண்ணியத்தை காயப்படுத்தியது மட்டுமின்றி, ஜனநாயக கொள்கைகளையும், நாடாளுமன்ற கண்ணியத்தையும் அவமதித்த பாஜ எம்பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான நடத்தைக்காக பாஜ எம்பி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பாஜ எம்பி மீது கடும் நடவடிக்கை: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Muslims ,STBI ,CHENNAI ,S.T.P.I. ,National Vice-President ,PM Kamble ,
× RELATED ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் – ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கைது