
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் நீதிமன்ற காவல் மேலும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்.22 உடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு 2 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை கடந்த 9 ஆம் தேதி இரவு ஆந்திர மாநில போலீசார் ரூ.371 கோடி திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்தனர். நந்தியாலா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடுவை போலீசார் கைது செய்தனர்.
மாநில குற்றப் புலனாய்வுத் துறை அவரை எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டது. அதை ஏற்று 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. . இந்த நிலையில் 22ம் தேதி சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து விஜயவாடா நீதிமன்றத்தில் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 2 நாட்கள் அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவருக்கு மேலும் நீதிமன்ற காவல் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபுவின் திறன் மேம்பாட்டு வழக்கில் நீதிமன்ற காவலை மேலும் 11 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செப்.22 உடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு 2 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது.
The post ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் நீதிமன்ற காவல் மேலும் 11 நாட்கள் நீட்டிப்பு appeared first on Dinakaran.