×

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை; வரவும் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடியுள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது வாக்குச்சாவடி முகவர்களின் முதல் கடமை; வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமை தொகையை வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என கூறி கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் தருவேன் என்றார் மோடி, படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்கச் சொல்கிறார் மோடி. பகோடா விற்க சொல்வதுதான் வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதா என கேள்வி எழுப்பினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் மோடி அரசு தள்ளிவிட்டது. மேடைக்கு மேடை நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா என்றுதான் கேட்கிறோம் என முதல்வர் பேசினார். மிக முக்கியமான நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஈரோடு மஞ்சள் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியதும் பாஜக ஆட்சியின் சாதனை அல்ல. 2006ல் தொடங்கி படிப்படியாக நிறைவேற்றப்பட்டு நிலவில் சந்திரயான் 3 தடம் பதித்துள்ளது. எந்த சாதனையையும் செய்யாததால் எதையாவது சொல்லி வாக்கு கேட்கலாம் என நினைக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்துக்காகவே மகளிர் மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

ஜி20 மாநாடு நடத்தியதை சாதனையாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. ஜி20 மாநாட்டுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதற்கு அவர்கள் உரிமையும் கோர முடியாது என திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை; வரவும் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Chief Minister ,MJ G.K. Stalin ,Tiruppur ,Muhammad ,G.K. Stalin ,B.C. ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...