×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 399 ரன்கள் குவிப்பு

இந்தூர்: இந்தூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. இந்திய அணி வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர்.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்தியரேலிய அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் (104), ஷ்ரேயாஸ் ஐயர் (105) ஆகியோர் சதமடிக்க கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இன்று 399 ரன்கள் குவித்ததே இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது. 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 399 ரன்கள் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Australia ,Indore ,Dinakaran ,
× RELATED மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி