×

90 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

தண்டையார்பேட்டை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, வள்ளலாரின் 200வது ஆண்டு துவக்க விழா மற்றும் முப்பெரும் விழா தண்டையார்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்நடைபெற்றது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் சென்னை மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான நேதாஜி கணேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது; வள்ளலாரின் 200வது ஆண்டை கொண்டாடவும் முப்பெரும் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதன்படி தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல ஆட்சியில் பல முதல்வர்கள் வாக்குறுதிகளை அள்ளி தருவார்கள். ஆனால் அதில் 20 சதவீத வாக்குறுதிகளை தான் நிறைவேற்று வார்கள். ஆனால், நம் முதல்வர் 2 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு கூறினார்.

The post 90 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Tags : CM BC ,G.K. Stalin ,Minister ,B. K.K. SegarBabu ,Tamil Nadu ,CM G.K. ,Stalin ,Vallalar ,Pondadarbat ,CM BC. ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...