×

மயிலாப்பூர் பூங்காவிற்கு வரும் வாலிபர்களை மயக்கி பங்களா வீட்டில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது: 3 மேற்கு வங்க மாநில இளம் பெண்கள் மீட்பு

சென்னை: மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிற்கு வரும் வாலிபர்களை மயக்கி, பங்களா வீட்டில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கரை போலீசார் கைது ெசய்தனர். அவனிடம் இருந்து 3 மேற்கு வங்க இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நடைபயிற்சிக்கு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பூங்காவிற்கு வரும் வாலிபர்கள் மற்றும் வசதியான முதியவர்களை குறிவைத்து சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதாருக்கு புகார்கள் வந்தது. அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்படி விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பிரபு தலைமைலியான போலீசார் நேற்று காலை முதல் நாகேஸ்வரராவ் பூங்கா பகுதியில் பொதுமக்களை போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் உட்பட 2 பேர், பூங்காவில் அமர்ந்து இருந்த வாலிபர்கள் மற்றும் வசதியான முதியவர்களிடம் பேச்சு கொடுப்பது போல் நடித்து, அவர்களுக்கு செல்போன் மூலம் இளம் பெண்கள் புகைப்படங்களை காட்டி பாலியலுக்கு அழைத்துள்ளனர். இதை கவனித்த இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், அதிரடியாக பெண் உட்பட 2 பேரை சுற்றி வளைத்தனர். ஆனால் போலீசார் தங்களை சுற்றி வளைத்ததை கவனித்த பாலியல் தரகர்களான பெண் உட்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஒருவனை மட்டும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, வேலூரை சேர்ந்த வெங்கடேசன் (56) என்பதும், இவர் தனது சகோதரியான பிரபல பாலியல் புரோக்கர்களான விஜயலட்சுமி (58), மொய்தீன் பாஷா ஆகியோருடன் இணைந்து மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிற்கு வரும் வாலிபர்கள் மற்றும் வசதியான முதியவர்களை குறிவைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும், இதற்காக நாகேஸ்வரராவ் பூங்கா அருகே பங்களா வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து கடந்த 8 மாதங்களாக பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். பிறகு அவன் கொடுத்த தகவலின் படி, பங்களா வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், பாலியல் ெதாழிலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.மீட்கப்பட்ட 3 இளம்பெண்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய பிரபல பாலியல் புரோக்கர்களான விஜயலட்சுமி, மொய்தீன் பாஷாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

The post மயிலாப்பூர் பூங்காவிற்கு வரும் வாலிபர்களை மயக்கி பங்களா வீட்டில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது: 3 மேற்கு வங்க மாநில இளம் பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mylapore park ,West Bengal ,Chennai ,Mylapore Nageswara Rao Park ,
× RELATED மேற்குவங்க மாநிலம் அசன்சோல் அருகே...