×

சிஎம்டிஏ எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலி அனுமதியை தடுக்க வேண்டும்: ஆ.ஹென்றி வலியுறுத்தல்

சென்னை: ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (பெய்ரா) தலைவர் ஆ.ஹென்றி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்து, எளிமைப்படுத்தி சீர்தூக்கியதால், அத்துறை வளர்ச்சியும் எழுச்சியும் பெற்றிருக்கிறது.

சிஎம்டிஏ எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான அனகாபுத்தூர், ஆவடி (மாநகராட்சி), பல்லாவரம், பம்மல், பூந்தமல்லி, செம்பாக்கம், தாம்பரம் (மாநகராட்சி), திருவேற்காடு ஆகிய 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் மற்றும் 10 ஒன்றிய அலுவலகங்களில் மனைப் பிரிவு அனுமதி, மனை உட்பிரிவு அனுமதி, நிலம் மறுவகைப்பாடு மாற்றம், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட திட்ட அனுமதி போன்றவற்றின் அனுமதிக்கான விண்ணப்பம், சிஎம்டிஏ நிர்வாக சீர்கேட்டால் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

மேற்கண்ட பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆசியுடன் வீட்டுமனை அப்ரூவல் மற்றும் வணிக வளாக கட்டுமானத்துக்கான போலி அனுமதி கடிதங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பெறும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இவற்றை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post சிஎம்டிஏ எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலி அனுமதியை தடுக்க வேண்டும்: ஆ.ஹென்றி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CMDA ,A. Henry ,Chennai ,President ,Real ,Estate ,Federation ,Beira ,Henry ,Chief President of ,Tamil Nadu ,G.K. ,Stalin ,Dinakaran ,
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...