×

உலக கோப்பை கிரிக்கெட்; அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள்: ஹசீம் அம்லா கணிப்பு

கேப்டவுன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் 5ம்ேததி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணிகள் எவை என தென்ஆப்ரிக்க முன்னாள் வீரர் ஹஷீம் அம்லா கணித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளும் வலுவாக இருந்தாலும் அந்த அணிகளுக்கு வாய்ப்பு குறைவு தான்.

மேலும் தென்ஆப்ரிக்க அணிக்கு ஆலோசனை வழங்கி உள்ள அவர், உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டி தொடர்களின் போது நிச்சயமாக அழுத்தம் இருக்கும். அதே நேரம் உங்களுடைய ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தி வெளியில் இருந்து வரக்கூடிய கவனச்சிதறல்கள் மற்றும் அழுத்தங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள், என தெரிவித்துள்ளார்.

The post உலக கோப்பை கிரிக்கெட்; அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள்: ஹசீம் அம்லா கணிப்பு appeared first on Dinakaran.

Tags : World Cup Cricket ,Hasim Amla ,Capetown ,World Cup Cricket Series ,India ,Dinakaran ,
× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்...