×

கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5 வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5 வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து இன்று நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை சென்றுள்ளார். கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பூரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். திமுகவின் 14 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இதனிடையே கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5ம் வார்டுகளில் சாலை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

விளாங்குறிச்சி பகுதிக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

The post கோவை மாநகராட்சி விளாங்குறிச்சி பகுதியில் 8, 5 வார்டுகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Vlangurichi ,Gov. ,G.K. ,stalin ,Govai ,Govai Corporation ,Vlankirchi ,B.C. ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்...