×

கத்திகுத்து வழக்கில் மேலும் ஒருவர் கைது

சேலம், செப்.24: சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ருக்குல்லா, ஷம்சத்அலி உள்ளிட்ட 7 பேர், சமோசா தயாரித்து டீ கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 22ம்தேதி, சமோசா செய்து கொண்டிருந்த போது, அல்லிக்குட்டை பகுதியில் விநாயகர் சிலைக்கு பாதுகாப்புக்கு இருந்த வாலிபர்கள், வாய்க்கால்பட்டறைக்கு வந்து சமோசா வாங்கினர். அப்போது கூடுதலாக சமோசா கேட்டதாக கூறப்படுகிறது. அப்ேபாது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. சிறிது நேரத்தில் 10 பேர் சென்று தகராறு செய்ததுடன், ருக்குல்லா, ஷம்சத்அலி ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏற்கனவே தேவேந்திரன், சவுந்தரராஜன், மணிகண்டன், அரவிந்தராஜ், குகன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தற்போது வீராணத்தை சேர்ந்த கிரி(எ)சடையன் என்பவரை கைது செய்தனர். மேலும் 4 ேபரை தேடி வருகின்றனர்.

The post கத்திகுத்து வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Rukulla ,Shamsad Ali ,Ramanathapuram ,Salem Vaikkalpattara ,Dinakaran ,
× RELATED நில அளவை செய்யவிடாமல் தடுப்பதாக மாற்றுத்திறனாளி புகார்