×

திருவையாறிலிருந்து மேல உத்தமநல்லூருக்கு அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

தஞ்சாவூர், செப். 24: திருவையாறிலிருந்து மேல உத்தமநல்லூர் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க சாத்தியக்கூறு இருக்கின்றதா என துரை சந்திரசேகரன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். திருவையாறு அருகே மேல உத்தமநல்லூர் கிராமத்திற்கு 4 ஆண்டு காலமாக சாலை வசதி, பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்ததை சுட்டிக்காட்டி செய்தி வந்ததையடுத்து, மினி பஸ் வசதி சாலையின் இரு பக்கமும் கிராவல் கொட்டி தற்கால பணியானது நடைபெற்று வருகிறது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், நெடுஞ்சாலைதுறை தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் செந்தில்குமார், திருவையாறு உதவி கோட்டபொறியாளர் ராம் பிரபு, உதவி பொறியாளர் கலைராஜன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அரசு பேருந்து இயக்கி பார்த்தோம் சாலையை ஆய்வு செய்த பின்னர் அரசு பேருந்து இயக்ககூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால் சாலையை சரி செய்து விட்டு அவற்றை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்படும் என துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தெரிவித்தார். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் வளைவுகளில் பேருந்து திரும்பும் அளவிற்கு அளவீடு செய்து செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன், உப்பு காட்சிப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post திருவையாறிலிருந்து மேல உத்தமநல்லூருக்கு அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvaiyar ,Mela Uttamanallur ,Thanjavur ,Durai Chandrasekaran ,Thiruvaiyar ,Uttamanallur ,
× RELATED சொகுசு காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்..!!