×

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

திருவிடைமருதூர், செப்.24: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழக திருப்பதி எனப்படும் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய வந்த வண்ணம் இருந்தனர்.

மூலவர் வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு துளசி அர்ச்சனை நடந்தது. மேலும் மூலவர் விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, சுப்ரபாதம் சேவை போன்ற வழக்கமான நித்திய பூஜைகள் நடந்தது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அனைத்து சன்னதிகளிலும் வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். வெளிப்பிரகாரத்தில் உள்ள என்னப்பன், மணியப்பன், பொன்னப்பன் சன்னதிகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

The post திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thirunageswaram Oppiliyappan temple ,Thiruvidaimarudur ,Tirunageswaram Oppiliyappan Temple ,Puratasi ,
× RELATED கும்பகோணம் அருகே பரபரப்பு: கிராமத்திற்குள் வந்த முதலை