×

பனியன் தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு

 

திருப்பூர், செப்.24: திருப்பூர் பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்தப்படி 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறை சம்பளத்தில் இருந்து 4 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். என எல்பிஎப் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்ரமணியம், பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்டிங், டைலர், அயர்ன், பேக்கிங், சிங்கர், நிட்டிங் தொழிலாளருக்கு, அடிப்படை சம்பளம், 270.35 ரூபாய், 4 சதவீத உயர்வு, பஞ்சப்படி, 206.03, பயணப்படி, 25 ரூபாய் சேர்த்து, ஷிப்டுக்கு, 512.66 ரூபாய் சம்பளம் பெற வேண்டும்.

கை மடிக்கும் தொழிலாளர், 135.24 ரூபாயில் இருந்து, 371.95 ரூபாய் பெற வேண்டும். டேமேஜ் தொழிலாளர் 8.05 ரூபாயில் இருந்து, 343.67 ரூபாய் பெற வேண்டும். அடுக்கிகட்டும் தொழிலாளர், 77.04 ரூபாயில் இருந்து, 312.34 ரூபாய் பெற வேண்டும். லோக்கல் மெஷின் பிரிவில், 251.91 ரூபாயில் இருந்து, 493.98 ரூபாய் வீதம் ‘ஷிப்ட்’டுக்கு சம்பளம் பெற வேண்டும் என எல்பிஎப் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

The post பனியன் தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED சாயக்கழிவுநீரை திறந்து விடும் சாய...