×

ஆலத்தூர் தாலுக்கா செட்டிகுளம் அரசு பள்ளியில் தூய்மை பணி

பாடாலூர், செப்.24: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணி நேற்று நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் மரக்கிளைகளையும் கழித்தும் வளாகத்தில் சுத்தப்படுத்தி தூய்மையாக வைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தூய்மை பணி பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில், ஆங்காங்கே குவிந்திருந்த மர இலைகள் மற்றும் பள்ளி மேற்கூரையில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. பள்ளியைச் சுற்றிலும் முளைத்திறந்த செடி கொடிகள் அகற்றப்பட்டன. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலத்தூர் தாலுக்கா செட்டிகுளம் அரசு பள்ளியில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Chettikulam Government School ,Alatur ,Taluk ,Padalur ,Chettikulam Government High School ,Alathur Taluk ,Perambalur District ,
× RELATED ஆலத்தூர் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை