×

நாங்குநேரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நெல்லை, செப்.24: நாங்குநேரி அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாங்குநேரி அருகேயுள்ள சூரங்குடி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வன் (41). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. செல்வன் வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்துவிட்டு பின்னர் ஊர் திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் கோவைக்கு வேலைக்கு செல்ல நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்.

பஸ் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த போது அவரது பேக்கை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் திரும்பி சூரங்குடிக்கு சென்றார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22ம் தேதி அவர் இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாங்குநேரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nanguneri ,Nellai ,Surangudi Amman ,Dinakaran ,
× RELATED நாங்குநேரியில் நீதிமன்றம் அருகே உள்ள...