- தேவிபட்டினம் புனித குழந்தை தெரசா கோவில் திருவிழா
- சிவகிரியை ஏற்றுதல்
- Devipatnam
- தேவிபட்டினம் புனித குழந்தை தெரசா ஆலய திருவிழா கொடியேற்றம்
சிவகிரி,செப்.24: தேவிபட்டணம் புனித குழந்தை தெரசாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் இறைமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தேவிபட்டணத்தில் நூறு ஆண்டுகள் பழமையான புனித குழந்தை தெரசாள் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு ஆலயம் முன்பு கொடிக்கம்பத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தை அருள் அலெக்சாண்டர், பங்கு அருள் தந்தை இருதய ராஜ் ஆகியோர் திருக்கொடியினை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. வரும் அக்.1ம் தேதி சப்பர பவனி நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் அருட்சகோதரிகள், சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவகிரி பங்குத்தந்தை அருள் அலெக்சாண்டர், ஊர் நிர்வாகிகள் தலைவர் தர்மராஜா, செயலாளர் நவமணி ஜோசப், பொருளாளர் தலைமலை, உபதேசியார் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் சேவியர் பொன்னுச்சாமி, தலைமை ஆசிரியர் அந்தோணி, ஆசிரியர் அமல்ராஜ் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
The post தேவிபட்டணம் புனித குழந்தை தெரசாள் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.