
திண்டுக்கல், செப். 24: திண்டுக்கல் நேருஜி நினைவு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் அருகே மேற்கு ரத வீதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேருஜி பள்ளியின் கணினி அறை பின்புறம் செப்டிக்டேங் உள்ளது. இப்பகுதியில் வில், வாள் ஏந்திய வீரபத்திரர் சிலை, லிங்கம், பாம்புடன் கூடிய காளியம்மன், மாரியம்மன் சிலைகள் கடந்த 1 மாதமாக கேட்பாரற்று கிடக்கிறது.
இதன் அருகே மேலும் சில கற்சிலைகளும் மண்ணில் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இங்குள்ள பள்ளி கட்டிடம் விரிவாக்க பணிக்காக வானம் தோண்டும் வேலை நடைபெற்ற போது இந்த சாமி சிலைகள் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தொல்லியல் துறையினர், இந்து சமய அறநிலையத்துறையினர் இப்பிரச்னையில் தலையிட்டு சிலைகளை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரசு பள்ளியில் கேட்பாரற்று கிடக்கும் கற்சிலைகள் appeared first on Dinakaran.