×

டூவீலரில் சென்ற இருவர் படுகாயம்

 

போடி, செப். 24: தேனி அல்லிநகரம் மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ராஜா மகன் கோல்ராஜ் (27), சுப்புராஜ் மகன் நவீன்குமார் (27). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் டூவீலரில் போடிமெட்டு மலைச்சாலை வழியாக வந்துக் கொண்டிருந்தனர். புலியூத்து அருகில் 8வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, எதிர்ப்புறம் வேகமாக வந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டு டூவீலரில் அடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கோகுல்ராஜ், நவீன்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரில் குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post டூவீலரில் சென்ற இருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Raja son ,Kolraj ,Subburaj ,Theni Allinagaram High School Street ,
× RELATED தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு