×

திருப்புத்தூர் பேரூராட்சியில் காவிரி குடிநீர் 4 நாட்களுக்கு நிறுத்தம்

திருப்புத்தூர், செப்.24: திருப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் வழங்கப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் சில இடங்களில் பழுதடைந்து உள்ளதால், நான்கு நாட்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்கிறது. இதில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் வரும் ஊர்களான பொன்னமராவதி, நெற்குப்பை, திருப்புத்தூர், கல்லல், காளையார்கோவில், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் செல்லும் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், நேற்று முதல் நான்கு நாட்களுக்கு திருப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் வழங்கப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் வழங்க இயலாது என பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் திருப்புத்தூர் நகர் பகுதி முழுவதும் ஒளிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்புத்தூர் பேரூராட்சியில் காவிரி குடிநீர் 4 நாட்களுக்கு நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Tiruputhur ,Tiruputhur Municipal Corporation ,Dinakaran ,
× RELATED திருப்புத்தூரில் பஸ் ஸ்டாண்டிற்குள் இடையூறாக கால்நடைகள்