×

படைவீரர்களுக்கு குறைதீர் முகாம்

 

சிவகங்கை, செப்.24: முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான குறைதீர் முகாம் கோவையில் நடக்க உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தீர்வு காண ஏதுவாக, கோவை தனியார் கல்லூரியில் அக்.12மற்றும் அக்.13ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால், இந்த முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம். நேரடியாக கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கான படிவத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றுகளை இணைத்து சென்னை அலுவலகம் அல்லது legaladalatcdachn@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் விபரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04575 240483 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post படைவீரர்களுக்கு குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Kuradithir Camp ,Sivagangai ,Coimbatore ,Asha Ajith ,
× RELATED பள்ளியில் எமிஸ் பதிவுகளில் இருந்து...