×

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார்

 

பரமக்குடி,செப்.24: மூவலூர் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நயினார்கோவில் ஒன்றியம் மூவலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.

பின்னர் நயினார்கோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமை பார்வையிட்டு தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் மருத்துவ தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நயினார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, நயினார்கோவில் ஒன்றிய துணை செயலாளர் திலகர், ஒன்றிய கவுன்சிலர் நல்லதம்பி, வட்டார மருத்துவ அலுவலர்கள் முத்துகுமார், மருத்துவ அலுவலர் வைரம், சுகாதார மேற்பார்வையாளர் வேல்முருகன் மற்றும் சுகாதார பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

The post வருமுன் காப்போம் மருத்துவ முகாம் எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA Murugesan ,Varumun Kappom medical camp ,Paramakudi ,Moovalur ,Paramakkudi ,Dinakaran ,
× RELATED சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்