×

போகலூர் ஒன்றியத்தில் கிராம மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர்

பரமக்குடி,செப்.24: பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வைரவனேந்தல் மற்றும் வீரவனூர் ஊராட்சிகளில் கிராம மக்களை கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறுகிறீர்களா. மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்பதை பொதுமக்களிடம் கேட்டறிந்தால் அதனை தொடர்ந்து, தகுதியுடைய பயனாளிகள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா, நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா மற்றும் குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தவுடன், தேவையான கோரிக்கைகள் காலதாமதம் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கவும். உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். மேலும் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

The post போகலூர் ஒன்றியத்தில் கிராம மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Pokalur Union ,Paramakudi ,Collector ,Vishnu ,Vairavanendal ,Veeravanur ,Pokalur panchayat ,
× RELATED சிறுதானியங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்