×

காலாண்டு தேர்வு விடுமுறையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

 

மதுரை, செப். 24: தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்க கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் நடப்பு ஆண்டிற்கான நாட்டு நலப்பணி திட்ட முகாமை காலாண்டு தேர்வு விடுமுறையில் 7 நாட்கள் நடைபெற வேண்டும். இதற்கு உரிய திட்டமிடலை மேற்கொள்ள நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலருக்கு அறிவுறிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். மேலும் மதுரை மாவட்டத்தில் நாட்டு நலப்பணி திட்டம் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் சார்பாகவும் முகாம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காலாண்டு தேர்வு விடுமுறையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்: பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Tamil Nadu School Education ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி முகாம்