×

மாவட்ட அளவிலான கல்வி கடன் முகாம்

நாமக்கல், செப்.24: நாமக்கல் மாவட்ட அளவிலான வங்கி, கல்வி கடன் சிறப்பு முகாம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் அணைத்து வங்கிகளின் சார்பில், கல்விக்கடன் சிறப்பு முகாம், வருகிற 27ம் தேதி, காலை 9 மணிக்கு, புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள பாவை இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கை பெற்று, தற்போது படித்து வரும் மாணவ மாணவிகள், இந்த முகாமில் கலந்து கொண்டு கல்வி கடன் பெறலாம்.முகாமில் பெறப்படும் கல்வி கடனுக்கான விண்ணப்பங்கள், சம்மந்தப்பட்ட வங்கி அலுவலர்களால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களுக்கு உடனடியாக கடன் அனுமதி கடிதங்கள் வழங்கப்படும்.கல்வி கடன் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட அளவிலான கல்வி கடன் முகாம் appeared first on Dinakaran.

Tags : District Level Educational Loan Camp ,Namakkal ,level bank ,District ,Level Education Loan Camp ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்