
- நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம்
- நாகப்பட்டினம்
- முன்னாள்
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- கருணாநிதி
- நாகப்பட்டினம் கலெக்டர்
- தின மலர்
நாகப்பட்டினம், செப்.24: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா 2023 ஜூன் 3ம் தேதி முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் மாபெரும் கடன் மேளா 26.9.2023 அன்று முற்பகல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதன்மை கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது. இந்த கடன் மேளாவில் ரூ.15 கோடி அளவிற்கு மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், வட்டியில்லா மீனவர் கடன், வட்டியில்லா மாற்றுத்திறனாளிகள் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் வைப்புத்தொகை திரட்டுதல் பல்வேறு வகையான கடன் மனுக்கள் பெறுதல், புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மத்திய கூட்டுறவு வங்கியின் தொழில் நுட்ப சேவைகளை விளம்பரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவுத் துறையில் மற்றுமொரு மாபெரும் கடன் மேளா நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இது தவிர மரக்கன்றுகள் நடும் விழா 3 இடங்களிலும், உறுப்பினர் சந்திப்பு கூட்டம் 2 இடங்களிலும் நடைபெற உள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு நாகப்பட்டினம் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் க.பா.அருளரசு கேட்டுக்கொண்டுள்ளார்.
The post நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம்தேதி கடன் மேளா appeared first on Dinakaran.