×

கரூர் பஸ் நிலையத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது கழிப்பிடம்

கரூர், செப்.24: கரூர் பஸ் நிலையத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன பொதுக்கலுப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் பேருந்து நிலையத்தில்தினசரி அரசு மற்றும் தனியார்ரூட் பஸ் மற்றும் டவுன் பஸ் உட்பட தினசரி 300க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.தினசரி மட்டும் கரூர் பஸ் நிலையத்தில் தினசரி 800 முறைக்கு மேல் பஸ்கள் வந்து மீண்டும் திரும்பி செல்கின்றன.சுமார் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் முதல் பொதுமக்கள் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.கரூர் பஸ் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சமாக இரண்டு இடங்களில் இலவச கழிப்பிடம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.கோவை, சேலம் ,ஈரோடு, திருப்பூர், தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக கடந்த 8 மாதத்திற்கு முன்பு பல லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பொது இலவச கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் ஏதோ காரணம் இன்றி இந்த இரண்டு மாதங்களாக கழிப்பறை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கழிப்பறைக்கு சென்று வர முடியாமல் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியிலேயே இயற்கை உபாதைகளை செய்து பஸ் நிலையத்தை அசிங்கப்படுத்துவதுடன் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மாநகராட்சி நிர்வாகம் நவீனமாக வசதியுடன் கட்டி முடிக்கப்பட்ட இலவச பொதுக்கழிப்பிடத்தைஅடைத்து வைத்திருப்பதால் தனியார் கட்டண கழிப்பிடத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.எனவே மாநகராட்சி நிர்வாகம் எந்தவித காலதாமதம் இன்றி பூட்டி கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கரூர் பஸ் நிலையத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது கழிப்பிடம் appeared first on Dinakaran.

Tags : Karur bus station ,Karur ,Karur bus ,station ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்தில் பணிகள் தொடக்கம்...