×

இலவச கண் சிகிச்சை முகாம்

 

திண்டுக்கல் செப் 24: திண்டுக்கல் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில், உள் விழி லென்ஸ் மற்றும் கண் குறித்த அனைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அறுவை சிகிச்சை செய்பவர்கள், மதுரை அரவிந்த் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்க நிர்வாகி குப்புசாமி, திருவருட் பேரவை பொருளாளர் காஜா மைதீன், செயலாளர் மலை ராஜன், பொருளாளர் கணேசன், டாக்டர். சசிகுமார், ராஜாங்கம், பொறியாளர் பெஞ்சமின் ஆரோக்கியம், வட்டாரத் தலைவர் முகமது சுல்தான், சுப்பிரமணி, நாக சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க காளிதாஸ், தர், திவ்யா செய்து இருந்தனர்.

The post இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Lions Association ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...