×

காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

காஞ்சிபுரம்: காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மனநலம் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மனநல திட்டம் சார்பில், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, \\\\”மனநலம், தற்கொலை தடுப்பு, போதைப்பொருட்களுக்கு அடிமைகளுக்கான தீர்வுகள்\\\\” எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று கல்லூரியில் நடைபெற்றது. இதில் காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார்.

தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர் தயாளன், பொருளாளர் மோகனரங்கன் மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் காஞ்சனா அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் கு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து கருத்தரங்கம் நோக்கம் பற்றி பேசினார். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் மாவட்ட மனநலத் திட்ட மருத்துவர் சதிஷ்குமார், சேட்டிலைட் மனநல மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மனநலம், தற்கொலை தடுப்பு, போதைப்பொருட்களுக்கு எதிரான கருத்துக்களை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பேபி நன்றி கூறினார்.

The post காஞ்சி கிருஷ்ணா கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Kanji Krishna College ,Kanchipuram ,Kanchi Krishna College ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...