×

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை வைகோ பேட்டி

மதுரை: மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மோடியால்தான் சாத்தியம் என அமித்ஷா கூறியது வேடிக்கையாக உள்ளது. இப்போது தேர்தல் வருவதால் இதை கொண்டு வந்தார்களே தவிர, இது நீண்ட கால கோரிக்கை. ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் இது தெரியவில்லையா? இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன.

ஒரு மாநிலத்தில் ஒரு ஆட்சி, கவிழுமானால் ஆட்சி பெரும்பான்மையை இழக்குமானால் அப்போது நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா? எனவே பல மாநிலங்களை உள்ளடக்கிய துணை கண்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர, நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றார்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Madurai ,Madurai Airport ,General Secretary ,Modi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத் துறையின் சாயம் வெளுத்து...