×
Saravana Stores

தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் ஐ.டி.துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: சென்னையில் தமிழ்நாடு எல்காட் நிறுவனம் சார்பில் அனிமேஷன் விசுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC-XR) ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் கொள்கை வரைவு தயார் செய்வதற்கான கருத்தரங்கை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், எல்காட் நிறுவனத்தின் செயலாளர் குமரகுருபரன் மற்றும் எல்காட் நிர்வாக இயக்குனர் அனிஷ் சேகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் அனிமேஷன் கேமிங் ஆகிய துறைகளில் தொழில் முனைவோர், நிறுவனம் நடத்தி வருபவர்கள், நிபுணர்கள் ஆகியோர் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டியளிக்கையில், ‘‘விஷுவல் எபெக்ட்ஸ் கேமிங் அனிமேஷன் துறையை தற்போது கையில் எடுத்துள்ளோம். உலகளாவிய சந்தையில் இத்துறையின் தேவை தீவிரமாக இருப்பதால், அதனை பூர்த்தி செய்யும் வகையில் எவ்வாறு இதனை வளர்ப்பது என்பது குறித்த கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் ஐடி துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகம் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ள நகரங்களில் ஐடி பார்க் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் ஐ.டி.துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Palanivel Thiagarajan ,Chennai ,Tamil Nadu Elcott Company ,Chennai, Tamil Nadu ,Visual Effects ,AVGC- ,
× RELATED போக்குவரத்து ஊழியர்கள் போனஸ்...