×

அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கண் மருத்துவ மாணவர்களுக்காக இரு நாட்கள் கல்வி பயிலரங்கம்: சென்னையில் நேற்று தொடங்கியது

சென்னை: அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கண் மருத்துவ மாணவர்களுக்காக இரு நாட்கள் கல்வி பயிலரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது. கண் மருத்துவவியல் மாணவர்களுக்காக தேசிய, முதுகலை தொடர் மருத்துவ கல்வி திட்டமான கல்பவிருக்ஷா-23 மருத்துவக்கல்வி செயல்திட்டத்தை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கண் ஆராய்ச்சி மையத்தின் ஒத்துழைப்போடு 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்துகிறது. ஏஐஓஎஸ் அறிவியல் குழுவின் தலைவர் நம்ருதா ஷர்மா இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் அமர் அகர்வால் மருத்துவர் சந்தோஷ் ஹொனாவர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

கல்பவிருக்ஷா என்ற முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான செயல்திட்டத்தில், தேர்வுகளை எழுதிய 35க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா முழுவதிலும் உள்ள கண் மருத்துவ மாணவர்களுக்காக தேசிய அளவிலான கல்வி பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. கண் மருத்துவவியலின் வெவ்வேறு துறைகளில் நிபுணர்களான ஆசிரியர்களுடன் கலந்துரையாடவும், அவர்களது விளக்க உரைகளை கேட்கவும் இந்நிகழ்ச்சி இம்மாணவர்களுக்கு ஒரு தளத்தை அமைத்துத் தருகிறது. இரண்டாவது நாளன்று நடைபெறும் நேர்வு விளக்கக்காட்சி மருத்துவ நேர்வுகளை விளக்கிக் கூறுவது மற்றும் விவாதிப்பது குறித்து கல்வியாளர்களிடமிருந்து நேரடி ஆலோசனை குறிப்புகளையும் மாணவர்கள் பெறுகின்றனர்.

செய்முறை அமர்வில் மாறுகண் போன்ற மிகச் சிரமமான நேர்வுகளை பரிசோதிப்பது அல்லது ரெட்டினோஸ்கோப்பி, கோனியோஸ்கோப்பி போன்ற நோயறிதல் செயல்முறை மீது ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் விளக்கமளிக்கப்படும். நாட்டில் வெகுசில கண் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கின்ற உயர் தொழில்நுட்ப திறன் கொண்ட மருத்துவ சாதனங்களைப் பயன்படுத்துவது மீதான பயிற்சியும் பங்கேற்பாளர்களுக்கு் கிடைக்கும். தேர்வு தொடர்பான அனைத்து முக்கிய அம்சங்களும் மற்றும் செய்முறை தேர்வுக்கான நேர்வு விளக்க காட்சிகளும் இந்த இரு-நாள் பயிலரங்கத்தில் இடம்பெறும்.

The post அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கண் மருத்துவ மாணவர்களுக்காக இரு நாட்கள் கல்வி பயிலரங்கம்: சென்னையில் நேற்று தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Aggarwals Eye Hospital ,Chennai ,Agarwals Eye Hospital ,Chennai.… ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...