×

இந்தியா கூட்டணி எதிர்க்கும் நிலையில் அதானி வீட்டிற்கு சென்றார் சரத்பவார்

புதுடெல்லி: இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தொழில் அதிபர் அதானி வீட்டிற்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தொழில் அதிபர் அதானி முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் தொடர்ந்து புகார் எழுப்பி வருகிறது. மோடி அரசுக்கு இந்த குற்றச்சாட்டுகள் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார். அங்கு சனந்த் கிராமத்தில் ஒரு தொழிற்சாலையை சரத்பவார் மற்றும் அதானி இணைந்து தொடங்கினர். அைத தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள அதானியின் வீடு மற்றும் அலுவலகத்திற்குச் சரத்பவார் சென்றார். மேலும் தனது எக்ஸ் பதிவில் இதுதொடர்பான படங்களையும் சரத்பவார் பதிவிட்டு இருப்பது இந்தியா கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இந்தியா கூட்டணி எதிர்க்கும் நிலையில் அதானி வீட்டிற்கு சென்றார் சரத்பவார் appeared first on Dinakaran.

Tags : Sarathpawar ,Adani ,Indian ,New Delhi ,Nationalist Congress ,Sharad Pawar ,India alliance ,Dinakaran ,
× RELATED அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா...