
குவாதலஜாரா: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி தொடர்ந்து 2வது ஆண்டாக தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் பிரான்ஸ் நட்சத்திரம் கரோலின் கார்சியாவுடன் (29 வயது, 11வது ரேங்க்) மோதிய சாக்கரி (28 வயது, 9வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-3, 6-0 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மெக்சிகோ ஓபனில் அவர் தொடர்ந்து 2வது ஆண்டாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனில் நடந்த கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்விகளை சந்தித்ததால் சோர்ந்து போயிருந்த சாக்கரிக்கு இந்த வெற்றி புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கரோலின் டோலஹைடு (25வயது, 47வது ரேங்க்) – சோபியா கெனின் (24வயது, 53வது ரேங்க்) மோதினர். அதில் டோலஹைடு 7-5, 6-3 என நேர் செட்களில் வென்று முதல் முறையாக பைனலுக்கு முன்னேறினார். இன்று இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சாக்கரி – டோலஹைடு மோதுகின்றனர்.
The post மெக்சிகோ ஓபன் டென்னிஸ் பைனலில் சாக்கரி appeared first on Dinakaran.