×

உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடு பாகிஸ்தான்: ஐநாவில் காஷ்மீர் பேச்சுக்கு இந்தியா தரமான பதிலடி

ஐக்கிய நாடுகள்: ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான், உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு என இந்தியா கடுமையான பதிலடி தந்தது. ஐநா பொதுச்சபையின் 78வது கூட்டத்தில் இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் பைசலாபாத்தில் பல தேவாலயங்கள், கிறிஸ்தவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 1000 பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அங்குள்ள பாகிஸ்தானியர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையமே அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்களின் பதிவுகளை கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான் என்பதை கூறிக் கொள்கிறேன்.மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இவ்வாறு அவர் பேசினார்.

The post உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடு பாகிஸ்தான்: ஐநாவில் காஷ்மீர் பேச்சுக்கு இந்தியா தரமான பதிலடி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,Kashmir ,UN ,United Nations ,UN General Assembly ,
× RELATED 5 ஆண்டுகள் காத்திருந்து இந்தியரை மணம்...