
- புரட்டாசி ஆன்மீக சுற்றுலா
- அமைச்சர்
- கே ஷெக்கர்பாபு
- சென்னை
- புரட்டாசி மாதம் வைணவம்
- இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை
- Tiruvallikeni
- பார்த்தசாரதி சுவாமி கோவில்
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத வைணவ கோயில் ஆன்மிக சுற்றுலாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆன்மிக சுற்றுலா ஒரே நாளில் 6 வைணவ கோயில்களுக்கு செல்லும். பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம், கோயில் பிரசாதம் மதிய உணவு வழங்கப்படும். இது சென்னையில் 2 பயணத் திட்டங்களாக தொடங்கப்படுகிறது. மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 4 மண்டலங்களிலும் இன்று தொடங்குகிறது.
இந்த ஆன்மிக சுற்றுலாவில் 62 நபர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர், அஷ்டலெட்சுமி கோயில், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம், ஸ்தல சயன பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள்கோயில் ஆகிய கோயில்களுக்கு 34 நபர்களும், இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை, நீர்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயில், பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர், வைத்திய வீர ராகவபெருமாள் கோயில், திருபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு 28 நபர்களும் அழைத்து செல்லப்படுகின்றனர்.
The post புரட்டாசி ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.