×

பாஜவை தூக்கி சுமப்பதையே கடமையாக கருதும் அதிமுக: திருமாவளவன் பேட்டி

தஞ்சாவூர்: அதிமுக- பாஜ விரிசல் ஒரு தற்காலிக அரசியல் நாடகம், பாஜவை தூக்கி சுமப்பதே தங்கள் கடமை என அதிமுக செயல்படுகிறது என்று திருமாவளவன் தெரிவித்தார். தஞ்சாவூரில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா வரவேற்கத்தக்கது. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் பாஜ எம்பி மற்றொரு எம்பியை அவதூறாக பேசியது கண்டனத்துக்குரியது. ஜீரோ மதிப்பெண் விவகாரம் நீட் தேர்வு தோல்வி அடைந்து விட்டது என்பதற்கு சான்று. பாஜ-அதிமுக விரிசல் என்பது ஒரு தற்காலிகமான அரசியல் நாடகம்.

கூட்டணியை ஒருபோதும் முறித்துக் கொள்ள மாட்டார்கள். அதிமுகவை நம்பி பாஜ இருக்கிறது. பாஜவை நம்பி அதிமுக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிக்கும் தனித்து நிற்க வாய்ப்பு இல்லை. அண்ணாமலை கவனம் ஈர்ப்பதற்காக கண்டதை பேசுகிறார். பேரறிஞர் அண்ணாவையே கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார். அவருக்கு ஒரு உளவியல் சிக்கல் இருக்கிறது. இதனால் மனதில் பட்டதெல்லாம் பேசுகிறார். அதிமுக பாஜவை சுமக்க சுமக்க வாக்கு வங்கியை மேலும் மேலும் இழக்க நேரிடும். ஆனால் அவர்கள் பாஜவை தூக்கி சுமப்பதே தங்களது கடமையாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜவை தூக்கி சுமப்பதையே கடமையாக கருதும் அதிமுக: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Baja ,
× RELATED பிரதமர் மோடி அண்மை காலமாக...