
- பாஜக
- அமலாக்கத் துறை
- வருமானம்
- சிபிஐ
- மல்லிகார்ஜூன்
- ஜெய்ப்பூர்
- மல்லிகார்ஜுன் கர்கே
- காங்கிரஸ்
- வருமான வரி
- தின மலர்
ஜெய்ப்பூர்: ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராகவும் 4 வேட்பாளர்களை பாஜக நிறுத்துகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தேர்தல்களில் தங்களுக்கு எதிராக ஒவ்வொரு தொகுதிகளிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ உள்ளடக்கிய 4 வேட்பாளர்களை பாஜக நிறுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். ஜெய்ப்பூரில் காங்கிரஸ் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே; நாம் பாஜகவை மட்டும் எதிர்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் 4 வேட்பாளர்களை நமக்கு எதிராக பாஜக நிறுத்துகிறது. கட்சியில் இருந்து ஒருவர், அமலாக்கத்துறையில் இருந்து ஒருவர், சிபிஐயில் இருந்து ஒருவர்,வருமானவரித் துறையில் இருந்து ஒருவர். இவர்கள் அனைவருக்கு எதிராகவும் நாம் வெல்ல வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பவும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்றவும் இதுவே நேரம். பாஜகவுக்கும் மோடிக்கும் எதிராக நாங்கள் நடத்தும் இந்த போர் 140 கோடி மக்களின் உரிமைக்காக.
இவற்றையெல்லாம் முறியடித்து தான் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சினிமா நடிகைகளை அழைத்த மத்திய அரசு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்?; அடிக்கல் நாட்டும்போது கூட அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அழைக்காததற்கு தீண்டாமையே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
The post ஒவ்வொரு தொகுதியிலும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளடக்கிய 4 வேட்பாளர்களை பாஜக களமிறக்குகிறது: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.