×

திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு..!!

திருசெந்தூர்: திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருச்செந்தூர் ஜீவாநகர் மீனவர் காலனியை சேர்ந்தவர் அந்தோணி மகன் சந்தியாகு இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த இன்னாசி, தொம்மை, கிளைட்டன், இன்னோசென்ட், மில்கிஸ்ட்டன் ஆகிய 6 பேரும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிக்கொண்டிருந்தபோது,

ராட்சத அலையில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்தது. பைபர் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் ஒன்றரை மணி நேரம் போராடி மீட்கப்பட்டனர். மேலும் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள வலைகள் கடலில் விழுந்து நாசமாகின; 2 என்ஜின்கள் சேதமடைந்தன.

இதில் 6 மீனவர்களும் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கரை திரும்பி கொண்டிருந்த மற்ற மீனவர்கள், தத்தளித்த மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த பகுதி மீனவர்கள் இரு பைபர் படகில் மீண்டும் கடலுக்கு சென்று, கடலில் கவிழ்ந்த படகை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.

The post திருச்செந்தூரில் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Thiruchendur ,Thiruchendur ,Jeevanagar Fisherman Colony ,
× RELATED திருச்செந்தூர் கோயில் கடற்கரையில்...