×

அண்ணாமலையை மாற்றவேண்டும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்!

டெல்லி: அண்ணாமலையை மாற்றவேண்டும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் நேரில் வலிவுறுத்தியுள்ளார். அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி என்று அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற அதிமுக கோரிக்கையை பாஜக உதாசீனப்படுத்தியது. தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என கூறினார். இதனையடுத்து இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அதிமுக தலைவர்களை அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நிலையில், இது தொடர்பாக பாஜக தலைமையிடம் முறையிடுவதற்காக அவர்கள் டெல்லி சென்றுள்ளனர். இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களை அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசினர்.

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

The post அண்ணாமலையை மாற்றவேண்டும் என பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : bajaka ,Delhi ,Chief Chief of ,Bajaka National Headquarters ,Anamalayas ,Alliance ,Chief of the Chief of the Chief of the Chief of the Chief of India ,Annamalayas ,
× RELATED “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது...