×

புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 410 கனஅடியில் இருந்து 396 கனஅடியாக சரிவு!

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 410 கனஅடியில் இருந்து 396 கனஅடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,136 மில்லியன் கனஅடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 159 கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 38 கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 142 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 30 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

The post புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 410 கனஅடியில் இருந்து 396 கனஅடியாக சரிவு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Canadians ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…