×

பாலம் அமைப்பதை தடுத்த 37 பேர் கைது

 

ஆர்.எஸ்.மங்கலம், செப். 23: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் இருந்து பால்குளம் வழியாக சோழந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் கொத்தியார்கோட்டை அருகில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையின் குறுக்கே பாலம் அமைக்க கடந்த ஆண்டு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. இந்த இடத்தில் பாலம் அமைத்தால் பால்குளம் கண்மாயின் தண்ணீர் வெளியேறி விடும்.

இதனால் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்று கூறி, பால்குளம் உள்ளிட்ட கிராமத்தினர் பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுடன் பாலம் கட்டும் பணிகள் நேற்று துவங்கியது. இதனை தடுக்க முயன்ற கிராம மக்கள் 37 பேரை திருப்பாலைக்குடி போலீஸார் கைது செய்து உப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post பாலம் அமைப்பதை தடுத்த 37 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Tirupalaikudi ,Cholandur ,Palkulam ,Kothiarkot ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி