×

சைக்கிள் தூய அகர்பத்தி ஜீரோ கார்பன் தூபம்

 

கோவை, செப். 23: சைக்கிள் தூய அகர்பத்தியின் 75 ஆண்டு கொண்டாட்டம் தொடர்பாக நிர்வாக இயக்குனர் அர்ஜூன் ரங்கா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மார்க்கையன்கோட்டையில் பிறந்த என் தாத்தா ரங்கா ராவ் சுயமாக தொழிலை கற்றுக்கொண்டு ஒரு பிராண்டை ஏற்படுத்தினார். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் அகர்பத்தியாக உள்ளது. தற்போது 75 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தயாரித்து வருகிறோம். உலகின் முதல் சான்றளிக்கப்பட்ட ஜீரோ கார்பன் தூபம் இது.

அகர்பத்தி மட்டுமின்றி ஓம் சாந்தி என்ற பெயரில் பூஜை சாமன்கள், குங்குமம், மஞ்சள் போன்றவை தயாரித்து விற்பனை செய்கிறோம். எங்கள் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் பெண்கள். தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி இளம்பெண்களை ஆதரிக்கும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 5 ஆண்டு உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இது 12 முதல் 17 வயது வரையிலான சிறுமிகளுக்காக உருவாக்கப்பட்டது. பக்தர்களை தெய்வீகத்துடன் இணைக்கும் ஒரு ஊடகமாக சைக்கிள் தூய அகர்பதி மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சைக்கிள் தூய அகர்பத்தி ஜீரோ கார்பன் தூபம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Managing Director ,Arjun Ranga ,Cycle Pure Agarbhati… ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி...