×

இனாம்குளத்தூரில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி

 

திருவெறும்பூர், செப்.23: மணிகண்டம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இனாம்குளத்தூரில் விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசனம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
பயிற்சிக்கு மணிகண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் பசரியாபேகம் தலைமை வகித்து, அட்மா திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். வேளாண்மை அலுவலர் பரமசிவம் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தபடும் மானியதிட்டங்கள், பயிர் காப்பீடு மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார். டேம்ஸ் அக்ரி பிரைவேட் லிமிட்டெட் -பகுதி மேலாளர் பிரகாஷ் நுண்ணீர் பாசனம் பற்றி விளக்கம் அளித்தார்.

நுண்ணீர் பாசன வகைகள், அரசு மானிய விபரங்கள், சொட்டுநீர் பாசனத்தில் பயன்பெறும் பயிர் வகைகள், நுண்ணீர் பாசனம் அமைக்க தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் நுண்ணீர் வேளாண்மை பாசன கருவிகள் பராமரிப்பு பற்றி பேசினார். உதவி அலுவலர் சுலோச்சனா மண்பரிசோதனை மற்றும் பசுந்தாள் உர பயிர்களின் நன்மைகள் பற்றி கூறினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான இனாம்குளத்தூர் விவசாயிகள் பங்கேற்றனர். பயிற்சிகான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பிரபாகரன் மற்றும் அட்மா திட்ட பணியாளர்களான உதவி தொழில்நுட்ப மேலாளர் பாபு, சிலம்பரசன் செய்திருந்தனர்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் நன்றி வழங்கினார்.

The post இனாம்குளத்தூரில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Inamkulathur ,Thiruverumpur ,Manikandam District Agriculture Farmer Welfare Department ,
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...