×

முத்துப்பேட்டை அருகே இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

 

முத்துப்பேட்டை, செப். 23: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முகாமை துவக்கி வைத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா வழங்கினார்.

மாவட்ட துணை அமைப்பாளர்கள் வினோத் குமார், முருகானந்தம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குன்னலூர் அன்பழகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் கந்தசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் தினேஷ்குமார், மாவட்ட சமூக வலைதள பொருளாளர் உதயசூரியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய துணை அமைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டை அருகே இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Muthuppet ,Thiruvarur district ,Itumbavan ,Muthupet ,
× RELATED தண்ணீர் நிரம்பி இருப்பதால்...