×

நீடாமங்கலம்-மன்னார்குடி ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி

 

நீடாமங்கலம், செப். 23: நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம்-மன்னார்குடி ரயில் பாதையாகும். மன்னார்குடியிலிருந்து, நீடாமங்கலம் வழியாக தினமும் எக்ஸ் பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள், வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் செல்கிறது.

இந்த ரயில்வேகேட் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் 20 ,21ம் தேதிகளில் 2 நாள் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி சம்பாவெளி ரயில்வே கேட் மூடப்பட்டு தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. ரயில்வே பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிக்கு ரயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் மாற்று வழிகளில் இயக்கப்பட்டது.

The post நீடாமங்கலம்-மன்னார்குடி ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Mannargudi ,Sampaveli ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்