×

அரசு கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

 

திருத்துறைப்பூண்டி, செப். 23: குடும்ப நலத்துறை சார்பில் பதின்ம வயது வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் அரசு மாதிரி கலைக்கல்லூரியில் வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளுக்கு உடல்நலம், தன் சுத்தம், நோய் தடுப்புக்கான வழிமுறைகள், சத்துணவு பதின்ம வயது திருமணத்தை தவிர்த்தல், பதின்ம வயதில் கர்ப்பம் ஏற்படுவதை தவிர்த்தல், இதனால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க எச்சரிக்கையாக இருத்தல் பற்றிய விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் கல்லூரி முதல்வர் மாறன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் குப்புசாமி, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, வட்டார சுகாதார புள்ளியியலாளர் அனுராதா மற்றும் தமிழ்மதி கிராம சுகாதார செவிலியர் சத்யா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post அரசு கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Awareness Camp ,Government ,College ,Thirutharapoondi ,Awareness ,Family Welfare Department ,Bharathidasan ,Government College ,
× RELATED கல்விக்கடன் விழிப்புணர்வு முகாம்